காம வெறி மிருகமா PSBB ஆசிரியர்? மாணவிகளை அந்த மாதிரி ரசித்து ரசித்து ஜூம் பண்ணி ஆபாசபடம்!!

ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து உள்ளதாக பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

காம வெறி மிருகமா PSBB ஆசிரியர்? மாணவிகளை அந்த மாதிரி ரசித்து ரசித்து ஜூம் பண்ணி ஆபாசபடம்!!

சென்னை கே.கே நகர் தனியார் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் அனுமதி பெற்றனர். இதில் ராஜகோபாலனிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்டு காவல் துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக 5 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்து அதற்கு பதில் அளிக்கும்படி ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

சுமார் 250 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்ததா? மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோ பதிவிட்டது ஏன்? அரைகுறை ஆடையோடு ஆன்லைன் வகுப்பு ஏன் நடத்தினீர்கள்? மாணவிகளுக்கு சினிமா ஆசை காட்டி என்னமாதிரியான மோசடிகளில் ஈடுபட்டீர்கள்? எந்தெந்த ஆசிரியருடன் சேர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தீர்கள்? இதுபோன்ற கேள்விகளை முன்வைத்து காவல் துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை zoom செய்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு நாட்கள் கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபாலன் மாணவிகளை  பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், பதிவு செய்து ஒவ்வொரு குற்றப்பத்திரிக்கையாக  தாக்கல் செய்ய இருப்பதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு அதிகப்படியான தண்டனை பெற்றுத்தர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்பு காலை 11 மணி அளவில் ஆசிரியர் ராஜகோபாலன், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி முதல்வர், தாளாளர், புகார் அளித்த மாணவி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.