சர்க்கரை ஆலை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெயிண்டர்…  

திருக்கோவிலூர் அருகே தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் பெயிண்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்க்கரை ஆலை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெயிண்டர்…   

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வேங்கூரில் இயங்கிவரும் தனியார் சர்க்கரை ஆலையில், கோவையை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வாயிலாக, நெய்வேலி பகுதியை சேர்ந்த மணிகண்டன் ( 36), மற்றும் அவரது உதவியாளர்கள் 10 பேருடன் இணைந்து சர்க்கரை ஆலை வளாகத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் கடந்த 3 மாதங்களாக ஈடுபட்டு வந்துள்ளார்.

 இதில் அவருக்கு சேரவேண்டிய  3,40,000 லட்சம் சம்பள பணத்தில் ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவகுமார் என்பவர் ஒரு தவணையாக 2,10,000 கொடுத்துவிட, மீதம் 1,30,000 ரூபாய் தராமல் கடந்த 1 மாதங்களுக்கும் மேலாக இழுத்தடித்து வந்துள்ளார். இதில், மனமுடைந்த  மணிகண்டனின் நேற்று இரவு சர்க்கரை ஆலையில் உள்ள தனது அறையில் தான் சாக போவதாகவும் அதற்கு ஒப்பந்ததாரர் சிவகுமார் தான் காரணம் என தனது செல்போனில் விடியோ பதிவு செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 தகவலறிந்த திருக்கோவிலூர் போலீசார் சர்க்கரை ஆலை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.