பணியால் பனி போல் மாயமான ஊராட்சி மன்றத் தலைவர்.. அதிர்ச்சி சம்பவம்.. கண்ணீர் கடலில் மனைவி!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மாற்று சாதி துணைத்தலைவர், ஊராட்சி செயலாளர் ஆதிக்கத்தால் பட்டியலின ஊராட்சிமன்றத் தலைவர் காணாமல் போன சம்பவம் அரங்கேறியுள்ளது.

பணியால் பனி போல் மாயமான ஊராட்சி மன்றத் தலைவர்.. அதிர்ச்சி சம்பவம்.. கண்ணீர் கடலில் மனைவி!!

பட்டியலின பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்ட கீழ்வணக்கம்பாடி ஊராட்சியில், அவ்வகுப்பைச் சேர்ந்த குமார் என்பவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சிமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் தாம் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் எனக் கூறி அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவனிடம் குமார் புகார் அளித்துள்ளார். அப்போது குமாரை ஒருமையில் பேசிய மகாதேவன், துணைத்தலைவர் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் எனக்கூ றி மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான குமார் திடீரென மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதன்பேரில் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டி வருவதாக குமாரின் மனைவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.