ரீல்ஸில் மோகம்... 8 மாத குழந்தையை விற்று ஆப்பிள் ஐபோன் வாங்கிய பெற்றோர்!!

ரீல்ஸில் மோகம்... 8 மாத குழந்தையை விற்று ஆப்பிள் ஐபோன் வாங்கிய பெற்றோர்!!

மேற்கு வங்கத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதற்காக தங்களது 8 மாத குழந்தையை விற்று தம்பதியர் ஐபோன் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இன்றைய சமூகத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் நடித்து பதிவேற்றுவதை விரும்பி செய்து வருகின்றனர். இந்த ரீல்ஸ் எடுக்கும் மோகத்தால், தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், பல தவறுகளையும் செய்து வருகின்றனர். இது போன்ற ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதற்கு விலை உயர்ந்த செல்போன்களை தேர்ந்தெடுத்து வாங்குகிறார்கள். அந்த செல்போன்களை வாங்குவதற்கும், பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், மேற்கு வங்கத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தின், பர்கானாஸ் மாவட்டம், பராக்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்தேவ் - சதி தம்பதிக்கு இன்ஸ்டாக்ராமில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்யும் மோகம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில், புதியதாக ஒரு ஆப்பிள் போன் வாங்க ஆசை பட்டுள்ளனர்.

அவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தரமான ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதற்காக ஐபோன் வாங்க முடிவு செய்து தங்களது 8 மாத ஆண் குழந்தையை 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்று புது ஐபோனை வாங்கி உள்ளனர். 

இதையறிந்த அக்கப்பக்கத்தினர் அளித்த தகலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை விற்றது அம்பலமானது. இதனால் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குழந்தையை மீட்டு மற்றும் குற்றவாளி பெற்றோரை கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க || தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட கொலை குற்றவாளி...!