ரயில் மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்த பயணிகள்.. போலீசார் விசாரணை!

ரயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்த பயணிகள்.. போலீசார் விசாரணை!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை மற்றும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் தினந்தோறும் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வருபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கொண்டு வரப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து வெளிமாநிலங்களில் இருந்து ரயில்களில் வரும் பயணிகளை சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரயிலில் தனிப்படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார், பயணிகள் உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். தொடர்ந்து ரயில் முழுவதும் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்த 5 பயணிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.