பெரம்பூர் நகைக்கடை கொள்ளை... நீதிமன்ற காவல் நீட்டிப்பு!!

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை...  நீதிமன்ற காவல் நீட்டிப்பு!!

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கங்காதரனுக்கு மேலும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள கே எல் நகைக்கடையில் கடந்த மாதம் பத்தாம் தேதி வெல்டிங் மிஷினால் துளை போட்டு ஒன்பது கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த வழக்கில் கங்காதரன் மற்றும் ஸ்டீபனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் நேற்று முன்தினம் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் ஆஜர் படுத்தினர்.  

அப்பொழுது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கங்காதரனை மட்டும் மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.  இதனை அடுத்து நேற்று இதனை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கங்காதரனை மேலும் ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.   இதனை தொடர்ந்து கங்காதரனை அழைத்துக் கொண்டு தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றுள்ளனர்.  

கங்காதரனுடன் சரண் அடைந்த மற்றொரு நபரான ஸ்டீபன் போலீஸ்காவல் முடிந்து நேற்று கர்நாடகா சிறையில் ஒப்படைக்கப்பட்டார்.  இதுவரை சுமார் நான்கரை கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கங்காதவனுக்கு மேலும் 5 நாள் போலீஸ்காவல் நீடிக்கப்பட்டுள்ளது.  

இதன் மூலம் மேலும் நகைகள் மீட்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த வழக்கில் தலைமறையாக உள்ள அருண் மற்றும் கௌதம் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க:    சென்னை தியாகராய நகர்... திருப்பதி தேவஸ்தான குடமுழுக்கு... அனுமதி இல்லை!!