பிக்கப் வாகனத்தின் டயர் வெடித்து விபத்து... ஒருவர் பலி...

நெடுஞ்சாலையில், பிக்கப் வாகனத்தின் டயர் வெடித்து ஒருவர் பலியானதை அடுத்து, படுகாயமடைந்த நால்வர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிக்கப் வாகனத்தின் டயர் வெடித்து விபத்து... ஒருவர் பலி...
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி | கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி பிக்கப் வாகனம் ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது. இந்நிலையில் பிக்கப் வாகனத்தை சென்னை மாதவரம் பகுதியை சோர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டிவந்தார். சூளகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சின்னார் தேசிய நெடுஞ்சாலையில் பிக்கப் வாகனம் சென்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்து வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னை மாதாவரத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் பிக்கப் வாகனத்தில் பின்பகுதியில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. பிக்கப் வாகனம் கவிழ்ந்த நிலையில் நாராயணன் என்பவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

வாகன விபத்து குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்தில் காயம் அடைந்த சென்னையை சேர்ந்த மற்ற 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக போலுப்பள்ளி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த நபரையும் பிரேத பரிசோதனைக்காக மருந்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பிக்கப் வாகனம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சூளகிரி வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com