விஷ சாராய வழக்கு: 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

விஷ சாராய வழக்கு: 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலுக்கான அவகாசம் முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர் படுத்தினர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷ சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை ஆனது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முதற்கட்டமாக 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பின்னர் முதற்கட்டமாக 11 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை துவக்கியது. பின்னர் 11 நபர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி புஷ்பராணி மூன்று நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

 கடந்த புதன்கிழமை சிபிசிஐடி போலிசார் இவர்களை காவலில் எடுத்து விசாரித்து வந்த நிலையில் விஷ சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட முத்து, ரவி, ஆறுமுகம், குணசீலன், மண்ணாங்கட்டி என முதற்கட்டமாக நேற்று  ஐந்து பேர் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் தற்போது அமரன், ஏழுமலை, இளையநம்பி, பிரபு, ராபர்ட், பரகத்துல்லா என 6 நபர்கள் தற்போது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் பொறுப்பு நீதிபதி அகிலா முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதையும் படிக்க:நடுநிலைமை வகிக்குமா செங்கோல்?