சுத்தியலால் அடித்து அம்மாவை கொன்ற மகன்... செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்...

செலவுக்கு பணம் தராததால் சுத்தியலால்  அடித்து  அம்மாவை கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

சுத்தியலால் அடித்து அம்மாவை கொன்ற மகன்... செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்...
போளூர் அல்லிநகர் நடேசன் தெருவை சேர்ந்த முனுசாமி மனைவி விஜயா (55) இவர் போளூர் பேருராட்சியில் 30 வருடங்களாக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கு  ஒரு மகன் 2 மகள்  அனைவருக்கும் திருமணம்  முடிந்து விட்டது. விஜயா மகன் அன்பு  என்கிற அன்பழகன் (39)   செங்கல் சூளையில் கூலிவேலை செய்து வருகிறார்.
 
விஜயாவிடம் மகன்  அன்பழகன் அடிக்கடி செலவிற்கு  பணம் கேட்டு தகராறு செய்து வருவார். நேற்றும் விஜாயாவிடம் மகன்  அன்பழகன் பணம் கேட்டு தகராறு செய்து வீட்டில் இருந்த  சுத்தியலை  எடுத்து விஜயா தலையில்  அடித்ததில்,  ரத்த வெள்ளத்தில்  கீழே விழுந்த விஜயா சம்பவம்  இடத்திலேயே இறந்தார்.
மகனே அம்மாவை கொன்ற சம்பவம்  குறித்து தகவல் அறிந்த போளூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி  சம்பவம் இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்கு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய அன்பழகனை  போலீசார்  தேடி வருகின்றனர்.