மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு மாமனாருக்கு போன் செய்துவிட்டு தப்பியோடிய கணவன்...

மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு மாமனாருக்கு போன் செய்துவிட்டு தப்பியோடிய கணவன்...

மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Published on

புழல் லட்சுமியம்மன் கோயில்  முதல் தெருவில் வசிப்பவர் 28 வயதான தமிழ்செல்வன்.லோடுமேனாக பணிபுரியும் இவரும் அவரது மனைவி சபரிதாவுடன் கடந்த  8 மாதங்களுக்கு முன்பு மீஞ்சூரில் இருந்து புழலில் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல்  கணவன் மனைவிக்கிடையே குடும்ப சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. தகராறு முற்றி வீட்டினுள்  அலறல் சப்தம் கேட்கவே ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என   புழல் காவல் நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர்  தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பெண் உயிரற்ற நிலையில் இருந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் காவல் நிலைய ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தனர்.உடனே அங்கு மாதவரம் துணை ஆணையாளர் சுந்தரவதனம் ஐபிஎஸ் மற்றும் ஆய்வாளர்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.பிறகு இதுபற்றி புழல் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்  குடும்ப சண்டையில் மனைவி சபரிதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அவரது மாமனாருக்கு போன் செய்துவிட்டு தமிழ் செல்வன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார் என தெரியவந்துள்ளது.  சபரிதாவை  நான்காவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார் என்பது தெரியவந்தது மேலும் தமிழ்செல்வன் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளதாகவும் இவர் மீது பல வழக்குகள்  உள்ளதாகவும் தலைமறைவான கொலையாளி  தமிழ்செல்வனை பிடித்த பிறகே உண்மைசூழ்நிலை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com