லால்குடியில் 8000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்.. புண்ணாக்கு கடை முதலாளி தலைமறைவு!!

8 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய புண்ணாக்கு கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

லால்குடியில் 8000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்.. புண்ணாக்கு கடை முதலாளி தலைமறைவு!!

திருச்சி மாவட்டம் லால்குடி மேலத் தெருவில் வசித்து வருபவர் கீர்த்தி வாசன் வயசு 26. இவர் அதே தெருவில் சொந்தமாக புண்ணாக்கு கடை நடத்திவருகிறார்.

இந்நிலையில் அவர் எல்.அபிஷேகபுரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ரேஷன் அரிசி பதுக்கி வருவதாக வட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைத்தது. அதன்பேரில் லால்குடி வட்டாட்சியர் சிசிலியா சுகந்தி, துணை வட்டாட்சியர் கார்த்திக் உள்ளிட்டோர் போலீசாருடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தனர்.

தொடர்ந்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 8000 கிலோ மதிப்புடைய 170 மூட்டை ரேஷன் அரிசி, எடை மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருச்சி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும், தலைமறவாக உள்ள கீர்த்தி வாசனை போலீசார் தேடி வருகின்றனர்.