சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர்...போக்சோ சட்டத்தில் கைது...
13 வயது சிறுமியை கடத்தி் சென்று கட்டாய திருமணம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

புழல் சிறையில் உள்ள கேன்டீனில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஜிலன்ஸ் தலைமைக் காவலர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது..
சென்னை புழல் சிறைக்காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ்(36). இவர் சென்னை புழல் மத்திய சிறை இரண்டில் விஜிலென்ஸ் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.
புழல் சிறை ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்த இவர், பின்னர் அயல் பணியாக புழல் சிறை 2-ல் விஜிலென்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் புழல் சிறையில் உள்ள கேன்டீனில் விஜிலன்ஸ் காவலர் ராஜேஷ் மாதம், மாதம் சுமார் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது.
இதனையடுத்து புழல் சிறை விஜிலன்ஸ் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது காவலர் ராஜேஷ் கேன்டீனில் இருந்து மாதம் 25 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் லஞ்சமாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவலர் ராஜேஷை புழல் சிறை 2 விஜிலன்ஸ் பிரிவில் இருந்து சிறை 1-க்குப் பணி மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் சிறைக் காவலர் ராஜேஷிடம் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஏற்கெனவே புழல் சிறையில் உள்ள கேன்டீனில் டீ, காபி - 50 ரூபாய், சிக்கன் பிரியாணி - 700 ரூபாய், பீடிக் கட்டு - 400 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், விஜிலன்ஸ் தலைமைக்காவலர் கேன்டீனில் லஞ்சம் பெற்ற விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | இஸ்ரேல்- ஹமாஸ் போர்: சமரச பேச்சுவார்த்தைக்கு பின், பணயக் கைதிகள் விடுவிப்பு..!
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கடந்த 2006லிருந்து 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்தநிலையில், கடந்த ஜூலை 17-ஆம் தேதி பொன்முடி, கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.41. 9 கோடி நிரந்தர வைப்பு தொகை, ரூ.13 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்கத்துறை முடக்கியது.
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது. நுங்கம்பாக்கத்தில் இந்தசூழலில் சென்னை உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க: ”மக்களை பற்றி கவலைப்படாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்” - எடப்பாடி
தேனி மாவட்டம் கம்பம் நகரில் காந்தி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் குமுளி தேனி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் காந்தி சிலையின் முன்பு அவ்வப்போது பல்வேறு விழாக்களை நடத்தி வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் காந்தி சிலையின் வலது கை உடைக்கப்பட்டு சிலையில் ஒரு கை இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சிலையில் இருந்த கையை அகற்றி அங்கிருந்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தியது தெரிய வந்து காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சிலையின் முன்பு அமர்ந்து காந்தியின் சிலையை அவமதித்த குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காந்தி சிலை உடைக்கப்பட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது கம்பம் நகர் பகுதியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
திருச்சியில் ஆசிரியர் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி, காஜா நகரில் வசித்து வரும் இக்பால் என்பவரின் மூத்த மகன் தாமீர். அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் காஜாமியான் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சமூக அறிவியல் ஆசிரியர் முருகதாஸ், தாமீரை பிரம்பால் சரமாரியாக அடித்து கொடுமை செய்துள்ளார்.
மேலும், "கொலை செய்து மண்ணில் புதைத்து விடுவேன், என்னை யாரும் கேட்க முடியாது " என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் உடலளவிலும், மனதளவிலும் மாணவர் தாமீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவனின் தந்தை இக்பால் கூறுகையில், "இதுகுறித்து பலமுறை பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் செயலாளர் மற்றும் தாளாளர் அவர்களிடமும் பல முறை பள்ளிக்கு நேரில் வந்தும் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினேன். எனது மகனை எனது வீட்டிற்கு வந்து தலைமை ஆசிரியர் சந்தித்த போதும் முருகதாஸ் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறிவந்தேன். தலைமை ஆசிரியர் மற்றும் செயலாளர்& தாளாளரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள். ஆனால், ஒரு மாதம் கடந்தும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "இறுதியாக கடந்த வெள்ளி கிழமை (24.11.23) அன்று என்னை பள்ளிக்கு நேரில் அழைத்த போதும் எனது மகனின் நிலை தொடர்ந்து சிகிச்சை எடுப்பதற்கு உரிய நிலை ஆகிவிட்டது என கூறினேன். ஆனால் தலைமை ஆசிரியரும், தாளாளரும் எனது மன வேதனையையும், எனது மகனின் நிலை இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம் கருதாமல் ரூ. 5000/- (ஐந்தாயிரம் ரூபாய்) வைத்துக்கொள் என்று என் சட்டைப்பாக்கெட்டில் திணித்ததைக் கண்டு அதிர்ச்சியும், கடும் மன வேதனையும் அடைந்தேன். பணத்தை திருப்பியும் கொடுத்துவிட்டேன். இதுவரை எந்த நடவடிக்கை வில்லை எனவே மாணவனை தாக்கிய ஆசிரியர் முருகதாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை டிசம்பர் எட்டாம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த தி.மு.க ஆட்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு அவரின் மனைவி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது.
வழக்கிலிருந்து தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை விடுவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இதையும் படிக்க: "10 ஆண்டுகளில் யானையை பார்க்க முடியாது" உயர்நீதிமன்றம் வேதனை!