சென்னையில் நள்ளிரவில் இளைஞர்கள் பைக் ரேஸ்...! துரத்தி பிடித்த போலீசார்...!!

சென்னையில் நள்ளிரவில் இளைஞர்கள் பைக் ரேஸ்...! துரத்தி பிடித்த போலீசார்...!!
Published on
Updated on
1 min read

சென்னையில் நள்ளிரவில் சில இளைஞர்கள் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை சினிமா பட பாணியில் துரத்தி பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 
 
சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை பகுதிகளில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட போவதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் நேற்று இரவு பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில்  சிலர் விலை உயர்ந்த வாகனங்களில் அதிவேகமாக, பொதுமக்களுக்கு இடையூறு செய்தப்படி வந்ததாக கூறப்படுகிறது.  இதைத் தொடர்ந்து அண்ணாசாலையில் அதிவேகமாக வந்தவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முற்பட்டனர். ஆனால் அவர்கள் கையில் சிக்காமல் இளைஞர்கள் தப்பித்து சென்றனர். போலீசார் சாலையில் ஓடியபடி அவர்களை துரத்தி சென்று கைது செய்தனர்.

இதனையடுத்து பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து 11 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் அந்த இளைஞர்கள் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com