
அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண்ணை காதலிப் பதாக கூறி சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் பெண்ணை காணவில்லை என பல்வேறு பகுதிகளில் தேடிய நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்ட போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த மோகன் ராஜை போக்சோவில் கைது செய்து சிறுமியை மீட்டனர்.