நர்சை கர்ப்பமாக்கி கருவை கலைத்த இன்ஸ்பெக்டர்: 2வது காதலன் மீது புகார் அளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...

கன்னியாகுமரியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கருகலைப்பு செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

நர்சை கர்ப்பமாக்கி கருவை கலைத்த இன்ஸ்பெக்டர்: 2வது காதலன் மீது புகார் அளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...

திருவனந்தபுரத்தில் செவிலியராக பணி புரிந்து வந்த 31வயதான இளம்பெண் மேக்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி காதலித்து பணத்தை பறித்துள்ளதாக பளுகல் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போழுது  பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் புகாரை பெற்று கொண்டு நர்ஸிடம் நடந்த விவரங்கள் எல்லாம் கேட்டறிந்துள்ளார். அப்போதுதான், இளம்பெண் தனியாக வசித்து வருவதை அறிந்து கொண்ட உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் தான் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து தந்து செவிலியரை குடியமர்த்தியுள்ளார். 


 இதனையடுத்து பிறகு ஆறுதல் சொல்வது போல அடிக்கடி அந்த வீட்டுக்கு சென்றவர், நாளடைவில் நர்ஸை பலாத்காரமும் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நர்ஸ் கர்ப்பமாகிய இதை சுந்தரலிங்கத்திடம் சொல்லி உள்ளார். ஆனால் சுந்தரலிங்கமோ அவரை அபார்ஷன் செய்துவிடும்படி சொல்லவும் அதற்கு நர்ஸ் மறுக்கவும் கட்டாயப்படுத்தி குலசேகரம் அருகே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அபார்ஷன் செய்ய வைத்துள்ளார். 

இந்த நிலையில் தனக்கு நடந்த கொடுமை பற்றி அந்த செவிலியர் பலமுறை போலீசில் புகார் தந்துள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஒருமுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று  புகார் தந்ததுடன், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். மேலும் அந்த செவிலியர் ஜோஸ்பினுக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினரும் இறங்கி போராட்டங்களும் நடத்தினர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது ஒருகட்டத்தில் பொறுமை இழந்த செவிலியர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். 

இதற்கு பிறகு மாதர் சங்கத்தினர்தான் விரைந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. அதில் அந்த செவிலியர் தாக்கல் செய்துள்ள மனுவில் எனக்கு திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து ஆகி உள்ளது. 9 வயதில் ஒரு மகள் உள்ளதாகவும் அவர் தங்கி படிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி,எனது உடமைகளை பறித்து அஜிஸ் என்பவர் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக நான் புகார் அளிப்பதற்காக பளுகல் காவல் நிலையத்துக்கு சென்றேன். அப்போது அங்கு சப் இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரலிங்கம் பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி வீட்டுக்கு வந்து என்னை பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் அடைந்தேன். வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கருவை கலைத்தார். இந்த பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கையும் இல்லை. என்னை பலாத்காரம் செய்த எஸ்.ஐ. மற்றும் அவருக்கு துணை நின்று எனது கருவை சட்ட விரோதமாக கலைத்ததுடன், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனுவின் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தியதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  எஸ்.ஐ. சுந்தரலிங்கம், பளுகல் காவல் நிலையத்தில் ஏட்டாக இருந்த கணேஷ்குமார், தச்சன்விளாகத்தை சேர்ந்த விஜின், அபிஷேக் , மூவோட்டுக்கோணம் உமேஷ் 45, தனியார் கிளினிக் டாக்டர் கார்மல் ராணி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தேவராஜ், அனில்குமார் ஆகிய 8 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 323, 354 (ஏ),376, 313 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இவ்வளவு குற்றச்சாட்டுக்கும் காரணமான உதவி ஆய்வாளராக இருந்த  சுந்தரலிங்கம், தற்போது பதவி உயர்வு பெற்று ஆய்வாளராக தேனி மாவட்டத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.