ரவுடிகள் வீட்டில் காவல்துறை அதிரடி சோதனை: பிரபல ரவுடி வீட்டிலிருந்து கத்தி பறிமுதல்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். 

சென்னையில், 5 ஆண்டுகளுக்கு மேலாக கொலை குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட  குற்றவாளிகளின் வீடுகளை கண்காணிக்கவும், அவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தவும் காவல்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் அவர்கள் வீட்டில்   ஆயுதங்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பின் அவற்றை கைப்பற்றவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக,  சாஸ்திரி நகர் மார்க்கெட் அருகில் அமைந்துள்ள ஒரு குற்றவாளியின் வீட்டினை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த கத்தி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை மாநகரில் கொலை, கொள்ளை குற்றங்களை தடுப்பதற்காக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.