சாதிப்பெயரை சொல்லி பெண்ணை திட்டிய காவலர் கைது...

சாதிப்பெயரை சொல்லி திட்டிய நிலையில், திருப்பூர் அவிநாசியில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாதிப்பெயரை சொல்லி பெண்ணை திட்டிய காவலர் கைது...

திருப்பூர் | அவிநாசி காவல் நிலையத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் அருள் குமார்காவலராக பணி பணிபுரிந்து வருகிறார். தனக்கு ஏற்கனவே இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளதை மறைத்து அவிநாசியை சேர்ந்த 27 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி உள்ளார். மேலும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கூறி பெண்ணின் ஜாதியின் பெயரை சொல்லி திட்டி உள்ளார். இதனால் மன உளைச்சலான அந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேலும் படிக்க | கர்ப்பணி என்றும் பாராமல் மனைவியை வெட்டிய கணவன்...தடுக்க வந்த தாயுக்கும் சரமாறியான வெட்டு...

உடனடியாக பெண்ணின் தாயார் அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகளை சேர்த்து சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் பெண்ணின் தாயார் அவிநாசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அருள்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | ஊருக்குள் புகும் வனவிலங்குகள்...! அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..!