சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்... இரு காவலர்கள் பணியிடை நீக்கம்...

ராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோடிய விவகாரத்தில் இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்... இரு காவலர்கள் பணியிடை நீக்கம்...
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம்,உச்சிப்புளியை சேர்ந்த மாரீஸ்வரன். திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்புடைய இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும்,மேல் சிகிச்சைக்காக அவரை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, உச்சிப்புளி காவல் நிலைய தலைமை காவலர்கள், தாமோதரன், ராமமூர்த்தி ஆகிய இருவரும் அவருக்கு  காவல் இருந்துள்ளனர்,

ஆனால், அவர் காவலர்கள்  இருவருக்கும் தெரியாமல் கைதி மாரீஸ்வரன் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்று விட்டார். இந்த விவகாரத்தில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, தாமோதரன், தலைமைக் காவலர்கள் ராமமூர்த்தி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com