இந்த நிலையில் மதுபாட்டில்களை கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், போலீசார் விடுவித்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஞானசுந்தரி, உதவி ஆய்வாளர் வரலட்சுமி உள்ளிட்ட ஒரே காவல் நிலையத்தைச் சேர்ந்த 6 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து, தஞ்சை சரக டிஐஜி பர்வேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.