மசாஜ் சென்டரில் விபச்சாரம்... வங்கதேச அழகிகள் கைது!!

கோவையில் மசாஜ் சென்ட்ர் என்ற பெயரி ல் விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மசாஜ் சென்டரில் விபச்சாரம்... வங்கதேச அழகிகள் கைது!!
Published on
Updated on
1 min read

கோவையில் மசாஜ் சென்ட்ர் என்ற பெயரி ல் விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி மகாநகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விபசாரம் நடத்திய கேரளாவை சேர்ந்த அஜித்மோன், கர்நாடகாவை சேர்ந்த மகந்த்ஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு வங்காளதேசத்தை சேர்ந்த 20 வயது அழகி உள்பட 2 பேர் மீட்கப்பட்டனர். இதில் வங்காளதேசத்தை சேர்ந்தவர் பாஸ் போர்ட் இல்லாமல் மேற்கு வங்காளம் வழியாக கோவை வந்தது தெரியவந்தது. அழகிகள் 2 பேரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்ததுடன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com