மூதாட்டியிடம் செயின் பறித்த இளம்பெண்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த இளம்பெண்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர்.

மூதாட்டியிடம் செயின் பறித்த இளம்பெண்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த இளம்பெண்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர்.

பரமக்குடி அருகே உள்ள நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. இவர் நேற்று ஆர்.எஸ்.மங்களத்தில் இருந்து பரமக்குடிக்கு பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அருகில் அமர்ந்திருந்த ரஞ்சிதா மற்றும் மாரி என்ற இரு பெண்கள் மூதாட்டியிடம் சகஜமாக பேசி செயினை பறித்துச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து இதனை உணர்ந்த மூதாட்டி, இரு பெண்கள் மீது சந்தேகமடைந்து அவர்கள் இறங்கிய பேருந்து நிலையத்தில் தேடி பார்த்துள்ளார். அப்போது இருவரும் ஒரு மளிகை கடையில் நின்றுகொண்டிருந்ததைக் கண்ட மூதாட்டி, பொதுமக்களிடம் கூறி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அவர்களிடம் இருந்து மூதாட்டியின் ஆறு சவரன் செயினை மீட்ட காவல்துறையினர், இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.