விஸ்வாவை என்கவுண்ட்டாில் போட்டு விடவா? உதவி ஆய்வாளா் வீடியோ வைரல்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் அருகே ரவுடி விஸ்வா என்கவுண்ட்டாில் சுட்டுக்கொலை செய்யப்பபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிளாய் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஸ்வா என்பவா் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவா் கடந்த ஆண்டு கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டாா். பின்னா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளிவந்த விஸ்வா ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்து வந்தாா். 

இதனையடுத்து அவரை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீசாா் தேடி வந்த நிலையில், அவா் திருத்தணி அருகே சோளிங்கர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்போில் அங்கு சென்ற போலீசாா் ரவுடி விஸ்வாகை கைது செய்து ஸ்ரீபெரும்புத்தூர் அழைத்து வந்தனா். 

இதையும் படிக்க : விடாது வெளுத்து வாங்கிய கனமழை...மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

சோகண்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது விஸ்வா காவலா்களை தாக்கிவிட்டு தப்பித்து ஓடினாா். தொடா்ந்து அவரை திருப்பாஞ்சூர் காட்டுப்பகுதியில் சுற்றி வளைத்த போலீசாா் துப்பாக்கியால் சுட்டனா். அதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா். மேலும் காயமடைந்த காவலா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

இதற்கிடையே ரவுடி விஸ்வா என்கவுண்ட்டாில் கொல்லப்படுவதற்கு முன்னதாக காவல் உதவி ஆய்வாளா் ஒருவா் காவல் ஆய்வாளாிடம் விஸ்வாவை என்கவுண்ட்டா் செய்வது குறித்து பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே காஞ்சிபுரத்தில் செய்தியாளா்களை சந்தித்து பேசிய ஏடிஜிபி அருண், ரவுடி விஸ்வாவை என்கவுண்ட்டா் செய்வது குறித்து காவல் ஆய்வாளாிடம், உதவி காவல் ஆய்வாளா் பேசும் வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தொிவித்தாா். மேலும் தற்போது ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினாா்.