சட்டமேதை குறித்து அவதூறு பேசிய ஆர் பி  வி எஸ் மணியன் அதிகாலையில் கைது!!

புரட்சியாளர் அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசிய  விஷ்வ ஹிந்து பரிஷத்  முன்னாள் மாநில துணை தலைவர் ஆர் பி  வி எஸ் மணியனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில், திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் குறித்து இந்துத்துவ சிந்தனையாளரான ஆர்.பி.வி.எஸ். மணியன் ஒருமையில் இழிவாக விமர்சித்து பேசியிருந்தார்.

அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு, பல அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். 

இதனையடுத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சமூக வலைதளங்களில் புகார்கள் குவிந்தன. இதனை தொடர்ந்து சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் திநகரில் உள்ள வீட்டில் வைத்து ஆர் பி வி எஸ் மணியனை  கைது செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7  பரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

இதையும் படிக்க || காஞ்சிபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை... மீறினால் கடும் நடவடிக்கை!!