வீடியோவில் இருந்தால் நிரூபிக்க படாது!- சிறுமியின் வைரல் வீடியோ குறித்து காவலர்கள் கருத்து!

சமீபத்தில் ஒரு சிறுமியின் வீடியோ வைரலான நிலையில், அவரது நிலை குறித்து காவலர்கள் கருத்துரைத்தது பெரும் சர்ச்சையைக் கிளபியுள்ளது.
வீடியோவில் இருந்தால் நிரூபிக்க படாது!- சிறுமியின் வைரல் வீடியோ குறித்து காவலர்கள் கருத்து!
Published on
Updated on
1 min read

உத்திரபிரதேசத்தின் முராதாபாத் பகுதியில் ஒரு 15 வயது சிறுமி, இரவில், சாலையில், ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக நடந்து வந்து வீட்டிற்கு வந்திருக்கிறார். அதனை சாலையைக் கடந்த பலரும் அமைதியாக பார்த்து, கண்டுகொள்ளாமலும் ஒரு சிலர் விடியோவையும் எடுத்தனர். ஆனால், அந்த பெண்ணை யாரும் காப்பாற்றவில்லை. அந்த பெண், நிர்வாணமாகவே நடந்து வந்து சேர்ந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், அந்த பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு அப்படியே விடப்பட்டிருக்கிறாரா என்ற கேள்விகள் நெட்டிசன்கள் மத்தியில் உருவாகி பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், காவல் துறை இதனை தனது கரங்களில் எடுத்துக் கொண்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா கொடுத்த புகாரின் பேரில், கூட்டு பாலியல் வன்புணர்வு என்ற குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒரு நபரை குற்றவாளியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பாலியல் வன்புணர்வு நடந்ததை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அது மட்டுமின்றி, முராதாபாத் எஸ்எஸ்பி ஹேமந்த் குட்டியால் இது குறித்து கூறுகையில், சிறுமிக்கு சிறுவயதிலிருந்தே மனநலப் பிரச்னைகள் இருப்பதாகவும், அதுபோன்ற (பாலியல் வன்புணர்வு) சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும், அவரது பெற்றோரின் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சிசிடிவியில் அந்த சிறுமி நிர்வாணமாக நடந்து வந்தது மட்டுமே இருபதால், அதை வைத்து சிறுமி பாலியல் சீண்டலுக்கோ அல்லது வன்புணர்வுக்கோ ஆளாகி இருக்கிறார் என்பதை உறுதி செய்ய முடியாது என காவல் துறை தெரிவித்துள்ளது. இதனால், பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com