திருமணம் ஆன 4 மாதத்தில் வீட்டை விட்டு வெளியேறிய புதுப்பெண்...! ரெயில் நிலையத்தில் மீட்பு

திருமணம் ஆன 4 மாதத்தில் கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய புதுமணப்பெண் ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

திருமணம் ஆன 4 மாதத்தில் வீட்டை விட்டு வெளியேறிய புதுப்பெண்...! ரெயில் நிலையத்தில் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பஞ்சாயத்து பி.டபிள்யூ காலனியை சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கும் சங்கீதா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையில் கோபமடைந்த சங்கீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய சங்கீதா, சென்னையில்  வேலைபார்க்கும் தனது தோழிகளுடன் சேர்ந்து தானும் வேலை தேடி செல்ல திட்டமிட்டுள்ளார். இதையடுத்து,  நாகர்கோவிலில் இருந்து ரெயிலில் புறப்பட்டு சென்ற சங்கீதா, செல்லும் வழியிலேயே கோபம் தனிந்து மனம்மாறிய அவர் மீண்டும் கணவரின் வீட்டிற்கே செல்ல முடிவெடுத்துள்ளார். இதனால்,  பாதிலேயே திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சங்கீதா இறங்கியுள்ளார். ஆனால் மீண்டும் திண்டுக்கல் செல்வதற்கான ரெயில் இல்லாததால் சங்கீதா நீண்ட நேரம் ரெயில்வே பிளாட்பாரத்தில் செய்வதறியாது நின்றுள்ளார். 

அப்போது, அங்கு வந்த சில இளைஞர்கள் சங்கீதாவை சூழ்ந்ததும், பதற்றமடைந்த சங்கீதா உடனே ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். அந்த சமயம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் சங்கீதாவை மீட்டு, விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கணவரிடம் சண்டைப்போட்டு கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும், பின்னர் மனம் மாறி மீண்டும் வீட்டுக்கே செல்ல முயற்சித்ததையும் சங்கீதா கூறியுள்ளார்.

இதையடுத்து,  போலீசார் கொடுத்த தகவலின் பேரில் திருச்சிக்கு வந்த யுவராஜ் தனது மனைவியை சமாதானபடுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.