
விளாத்திக்குளம் அருகே மாந்திரீகம் செய்வதற்காக கடத்தி வரப்பட்ட 5 தேவாங்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அழிந்து வரும் இனமாக தேவாங்கு, பல்வேறு மருந்துவ காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு, வெளி நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குருவார்பட்டியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மதுரையிலிருந்து விளாத்திகுளம் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு கூண்டில் அரியவகை பாலூட்டியான 5 தேவாங்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், மாந்திரீகம் செய்வதற்காக திண்டுக்கல்லில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, தேவாங்களை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.