திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பொம்மை விற்பதற்காக அழைத்து வரப்பட்டு பிச்சை எடுத்த 14 சிறுவர்களை போலீசார் மீட்டனர்.
கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பௌர்ணமி தினங்களில் பல்வேறு மாவட்ட, மாநில சிறுவர்கள் அதிக அளவில் பிச்சை எடுப்பது அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த கும்பல், 20க்கும் மேற்பட்ட சிறுவர்களை கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் பிரித்து பிச்சை எடுக்க வைத்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கிரிவல பாதையில் நடத்திய சோதனையில் அப்பகுதியில் பிச்சை எடுத்து கொண்டிருந்த 9 சிறுமிகள் மற்றும் 5 சிறுவர்கள் என 14 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.
.