ஓடிபி-யால் வந்த கலவரம்.. ஐடி ஊழியர் அடித்து கொலை.. கார் ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!!

கூடுவாஞ்சேரி அருகே  குடும்பத்தாரின் கண் முன்னே ஐடி ஊழியர் கார் ஓட்டுனரால் அடித்து  கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறது.

ஓடிபி-யால் வந்த கலவரம்.. ஐடி ஊழியர் அடித்து கொலை.. கார் ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உமேந்தர். கோவையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர்.. வார விடுமுறையையொட் டி, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று தனது குடும்பத்தினருடன் ஓ.எம்.ஆர்.சாலையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக வாடகை காரை உமேந்தர் புக் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு வந்த காரில் அனைவரும் ஏறிய நிலையில் கார் ஓட்டுநர் ரவி, உமேந்தரிடம் ஓ. டி.பி. எண்ணை கேட்டுள்ளார்.  ஓ டிபியை கூற கால தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், அனைவரையும் கீழே இறங்க சொல்லி ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் கார் ஓட்டுநருக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்ட நிலையில் நிலைதடுமாறி கீழே விழுந்த உமேந்தர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழத்தியது.

இதனிடையே தப்பி ஓட முயன்ற கார் ஓட்டுநரை பொதுமக்கள் மடக்கி பி டித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.