பட்டப்பகலில் மசாஜ் சென்டருக்குள் நுழைந்து கொள்ளை... கத்தியைக் காட்டி மிரட்டிய சிசிடிவி காட்சி வெளியீடு...

பட்டப்பகலில் மசாஜ் சென்டருக்குள் நுழைந்து, ரூ.30,000 பணம், 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட  சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் மசாஜ் சென்டருக்குள் நுழைந்து கொள்ளை... கத்தியைக் காட்டி மிரட்டிய சிசிடிவி காட்சி வெளியீடு...

சென்னை வேளச்சேரியில், பட்டப்பகலில் மசாஜ் சென்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி  நகை, பணம் கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நூறு அடி சாலையில் உள்ள கிரியேட்டிவ் சலூன் அன்ட் ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் நேற்று மதியம் வெள்ளை உடை அணிந்து வந்தவருடன், 5 பேர் திடீரென நுழைந்துள்ளனர். பின்னர் பணம் கேட்டு ஸ்பா ஊழியரை பட்டா கத்தியால் தாக்கிய கும்பல், பெண்களின் கைப்பையில் இருந்து 30 ஆயிரம் ரூபாய், 7 செல்போன்கள் மற்றும் 5 சவரன் நகையை திருடியுள்ளனர்.

இதில் மற்றொரு பெண்ணின் நெற்றியிலும் அந்த கும்பல் கத்தியால் காயம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இந்தநிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.