கஞ்சா போதையில் போலீஸ் வாகனங்கள் சூறை... 5 மாதங்களுக்கு பிறகு குற்றவாளி கைது...

அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியில் காவல் ரோந்து வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்களை உடைத்து சூறையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி 5 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கஞ்சா போதையில் போலீஸ் வாகனங்கள் சூறை... 5 மாதங்களுக்கு பிறகு குற்றவாளி கைது...
Published on
Updated on
1 min read

சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில் கடந்த ஜூன் மாதம் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு சொந்தமான ரோந்து வாகனம் மற்றும் ஐ.சி.எப் காலனி  பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை சமூக விரோதிகள் சிலர் கஞ்சா போதையில் அடித்து உடைத்தனர்.

போலீஸ் வாகனத்தை உடைத்து காவலர்களை தாக்கியது அப்பகுதியில் பதட்டமான சூழலை ஏற்படுத்தி பரபரப்பாக காணப்பட்டது. அப்போதுகுற்ற வழக்கில் ஈடுபட்ட 7 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான கருதப்பட்ட கடா( எ) ஜோஸ்வாவை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு  அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். 

அப்போது சந்தேகத்திற்கிடமாக  வந்த நபரை மடக்கி போலீசார் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை அளித்ததால் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அத்திப்பட்டில் காவல்துறையினரின் ரோந்து வாகனத்தை உடைத்த கடா(எ)ஜோஸ்வா என்பது தெரியவந்தது.

மேலும் கஞ்சா போதையில் காவல்துறையினரின் வாகனத்தை உடைத்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 
காவல்துறை வாகனம் உள்ளிட்ட பொது சொத்துக்களை அடித்து உடைத்து சூறையாடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com