பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள்: தற்போது கம்பி எண்ணும் அவலம்!  

சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய ரவுடியின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலான நிலையில் அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

சென்னை கோயம்பேடு பகுதியில் ஒரு புறம் ஆட்டோ-வை வீலிங் செய்துகொண்டே மறுபுறம் 3 அடி நீளமுள்ள பட்டாக் கத்தியால் ஒரு நபர் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த தகவல் கோயம்பேடு போலீசாருக்கு தெரியவர பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபரை தேடி வந்த நிலையில் அந்த நபர் கோயம்பேடு பிருந்தாவன் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சூர்யா என்பது தெரியவந்தது.

இதனையடுத்து சூர்யா-வை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடியதும், அவர் மீது ஏற்கனவே கோயம்பேடு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு ஒன்றும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு ஒன்றும் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.