யூட்யூப் சேனல் முடக்கம்! ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா மீது பாய்கிறது குண்டர் சட்டம்?

ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரதுன் ஆண் நண்பர் சிக்கா மீது குண்டர் சட்டம் பாய வாய்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூட்யூப் சேனல் முடக்கம்! ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா மீது பாய்கிறது குண்டர் சட்டம்?
Published on
Updated on
1 min read

சமூக வலைத்தளம் மற்றும் யூடியூபில் தொடர்ந்து ஆபாசமாக பேசிய புகாரில், மதுரையில் பதுங்கி இருந்த சூர்யா, சிக்கந்தர் இருவரையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதுவரை ரவுடி பேபி சூர்யா மீது பல வழக்குகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து இது போன்று ஆபாசமாகபேசி யூ ட்யூப் சேனலில் அவர் பதிவு செய்து வருவதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல், சூர்யா மற்றும் சிக்கந்தரின் யூடியூப் சேனலையும் முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக வலைதளங்களில் சமூகத்தையும், இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை சூர்யாவும், சிக்கந்தர்ஷாவும் பதிவு செய்து வருகின்றனர். சமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடும் என்பதால் இவர்களின் யூடியூப் சேனலை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் சமூகநலன்களையும், இளைஞர்களையும் சீர்கெடுக்கும் தவறான கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வோரின் சேனல்கள் முடக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com