சிறைக்கு செல்ல காரணமானவரை பழி தீர்க்க நினைத்த ரவுடி...பெட்ரோல் குண்டை மாற்றி பக்கத்து வீட்டில் வீசியதால் பரபரப்பு

சிறைக்கு செல்ல காரணமானவரை பழிதீர்க்க நினைத்த ரவுடி, அவரின் வீட்டை மறந்து, பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைக்கு செல்ல காரணமானவரை பழி தீர்க்க நினைத்த  ரவுடி...பெட்ரோல் குண்டை மாற்றி பக்கத்து வீட்டில் வீசியதால் பரபரப்பு

சென்னை திரு வி க நகர் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற குள்ளமணி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் திருவிக நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இவர் தண்டையார்பேட்டை பகுதிக்குட்பட்ட கைலாசம் தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கடந்த ஜூலை மாதம் வசித்து வந்துள்ளார்.

அப்பொழுது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி ஒருவரை வெட்டிய வழக்கில் சிறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்த வழக்கில்  தன்னை பிடித்து கொடுத்தவர்களை பழிவாங்கும் நோக்கில் சிறைக்கு சென்று திரும்பியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இன்று தன்னை சிறைக்கு அனுப்பிய நபரை பழி தீர்க்க நினைத்த ரவுடி குள்ளமணி, அவர் வீட்டில் பெரோல் குண்டை வீசுவதற்கு பதிலாக பக்கத்து வீட்டில் வீசிவீட்டில் சென்றுள்ளார். 

இச்சம்பவத்தால் அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும்  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தண்டையார்பேட்டை போலீசார் குள்ள மணியை துப்பாக்கி முனையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.