மூதாட்டிபோல் வேடமணிந்து ரூ.1 கோடி கொள்ளை: இருவர் கைது!

மூதாட்டி போல  ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான சொத்தினை நில அபகரிப்பு செய்த இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

மூதாட்டிபோல் வேடமணிந்து ரூ.1 கோடி கொள்ளை: இருவர் கைது!

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி வசந்தா என்பவர் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார்  அளித்தார். அதில், "தனக்கு சொந்தமான ரூ. 1 கோடி மதிப்பிலான கொளத்தூரில் உள்ள 2,822 சதுர அடி காலி மனையை, தன்னைப்போல் வேறு நபரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பு செய்துள்ளனர் என புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்தா பெயரில் கிரையம் பெற்ற சொத்தினை வசந்தாவை போல வேறொரு நபரை வைத்து போலியான பொது அதிகார பத்திரம் தயார் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த நிலத்தின் மேல் போலியான பல ஆவணங்களை தயார் செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது.  போலியான பொது அதிகார பத்திரத்தை பதிவு செய்த சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் பெரம்பூரைச் சார்ந்த தேவராஜ் ஆகிய இருவரை  சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். மூதாட்டி வசந்தா போல நடித்து ஏமாற்றியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ராஜா மற்றும் தேவராஜ் ஆகியோரை நில அபகரிப்பு மோசடி வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி அவர்கள் உத்தரவின் பேரில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.