ஓனருக்கே தெரியாமல் விசைத்தறிகள் விற்பனை...  கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி கைது...

பல்லடம் அருகே உரிமையாளருக்கு தெரியாமல் நவீன விசைத்தறிகளை விற்பனை செய்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி ஜோதி காளிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓனருக்கே தெரியாமல் விசைத்தறிகள் விற்பனை...  கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி கைது...

கொடுவாய் பகுதியை சேர்ந்த காளிமுத்துக்கு சொந்தமாக குடோனை, செஞ்சேரி மலையை சேர்ந்த பிரபு வாடகைக்கு எடுத்து, அதில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நவீன விசைத்தறிகளை வைத்துள்ளார். மின் இணைப்பு கிடைக்காத காரணத்தால், தறிகளை இயக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், குடோனுக்கு சென்று பார்த்த பிரபு, 8 விசைத்தறிகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குடோன் உரிமையாளரிடம் கேட்டபோது, தமக்கு இருந்த கடன் பிரச்சினைக்காக விசைத்தறிகளை அடமானம் வைத்துள்ளதாகவும், சில நாட்களில் அவற்றை மீட்டு தருவதாகவும் காளிமுத்து கூறியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மீட்டு தராததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ராசாக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியனுக்கு விசைத்தறிகளை விற்பனை செய்ததை ஜோதி காளிமுத்து ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், பாலசுப்பிரமணியன் குடோனில் இருந்த 8 நவீன விசைத்தறிகளை பறிமுதல் செய்தனர்.