தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை... பாஜக பிரமுகர் பெட்ரோல் பங்க் மீது புகார்...

காரைக்காலில் பாஜக பிரமுகர் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை திருநள்ளாறு கோவிலுக்கு வந்த வெளிமாநில பக்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை... பாஜக பிரமுகர் பெட்ரோல் பங்க் மீது புகார்...
Published on
Updated on
1 min read

விழுப்புரத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் குரு பெயர்ச்சியை முன்னிட்டு,  தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆலங்குடியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, காரைக்கால் மையப்பகுதியில் திருநள்ளார் சாலையில் அமைந்துள்ள புதுச்சேரி பாஜக மாநில மகளிர் அணி துணை தலைவி பிரணாம்பாள் ராதா சொந்தமான பிஆர் என் பெட்ரோல் பங்கில் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பிறகு அங்கிருந்து கிளம்பி 2 கிலோமீட்டர் தூரம் சென்றபிறகு பழுது அடைந்து நின்றுவிட்டது.  அதனையடுத்து அவர் கார் ஷோரூமுக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த கார் மெக்கானிக் சோதனை செய்ததில், பெட்ரோலில் நீர் கலந்து இருந்தது தெரியவந்ததை அடுத்து காரைக்கால் உணவு பாதுகாப்பு துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை எடுத்துக் கொண்ட காவல் அதிகாரிகள் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். காரில் இருந்த பெட்ரோலையும் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். தொடர் புகாரில் சிக்கி வந்த பெட்ரோல் பங்க் தற்போது நீர் கலந்த பெட்ரோலை விற்பனை செய்தது வாகன ஓட்டிகளிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com