சகோதரனைக் காப்பாற்ற தானும் கிணற்றில் குதித்து இருவரும் பலி!

சங்கராபுரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

சகோதரனைக் காப்பாற்ற தானும் கிணற்றில் குதித்து இருவரும் பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளன.

குமாரின் மகன்கள் தமிழ்மாறன் (10) மோகன பிரியன் (7) ஆகிய இருவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த கபூர் என்பவரது விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தமிழ் மாறனுக்கு நீச்சல் பழக தெரியும் என்பதால் தமிழ்மாறன் மட்டும் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தான்.

மேலும் படிக்க | தாயிடம் இருந்து குழந்தையை பிரிப்பது துன்புறுத்தும் செயல்.. உயர்நீதிமன்றம் கருத்து..!

திடீரென நீரில் மூழ்கி படி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என தமிழ்மாறன் சத்தமிட்டான். நீச்சல் தெரியாத மோகன பிரியன் அண்ணனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அவனும் கிணற்றில் குதித்தான்.

இருவருமே கிணற்றில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அண்ணனை காப்பாற்ற கிணற்றில் குதித்த தம்பியும் உயிரிழந்தான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத்தால் மனைவியை இழந்த கணவன்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு சிறுவர்களையும் சடலமாக மீட்டனர்.  சம்பவம் குறித்து வடப்பொண்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.