
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தினுள் செண்பகராமன்புதூரை சேர்ந்த கண்ணன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கு பூ வியாபாரத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த கண்ணனிடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதில் ஒரு மாணவன் திடீரென கீழே கிடந்த மது பாட்டிலை எடுத்து உடைத்து பூ வியாபாரி கண்ணன் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனை கண்ட அருகில் நின்றவர்கள் வயிற்றில் குத்துப்பட்டு கீழே விழுந்த பூ வியாபாரி கண்ணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தினமும் மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்ல பேருந்துநிலையம் வரும்போது மாணவர்களுக்குள் தகராறு ஏற்படுவதாகவும், இதனை பூ வியாபாரி கண்ணன் போலீசாருக்கு தெரியப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதை தெரிந்து கொண்ட ஒரு சில மாணவர்கள் இதற்கு பலி வாங்க வேண்டும் என எண்ணிய நிலையில் இன்று பூ வியாபாரியிடம் வழுக்கட்டாயமாக மாணவர்கள் 4 பேர் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். அதில் திடீரென ஒரு மாணவன் கீழே கிடந்த மது பாட்டிலை எடுத்து உடைத்து பூ வியாபாரின் வயிற்றில் குத்தியுள்ளான்.
உடனே வியாபாரி வலியால் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் விசாரித்தை கண்டு மாணவர்கள் தப்பி ஓடியதாக தெரிகிறது. மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய பள்ளி மாணவர்கள தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.