விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி... ஆசை வார்த்தைக்கூறி பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன்...!

காஞ்சிபுரத்தில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவன் தலைமறைவாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
விளையாடிக் கொண்டிருந்த  4 வயது சிறுமி... ஆசை வார்த்தைக்கூறி பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன்...!
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி.  இவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் தனது 4 வயது பெண் குழந்தையை கணவரின் பாதுகாப்பில் விட்டுள்ளார். போதையிலிருந்த கணவர் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்றுள்ளார். சிறுமி பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்க போதையில் இருந்த தந்தை ஆழ்ந்து தூங்கியுள்ளார். அப்போது அனைத்தையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளான். 

இதையடுத்து சிறுமியைப் பெற்றோர்கள் தேடத் தொடங்கிய நிலையில் அழு குரல் கேட்டு சிறுமியை கண்டிபிடித்த போது சிறுமியின் நிலை கண்டு பெற்றோர் அதிர்ந்துள்ளனர். ரத்த போக்குடன் பரிதவித்த சிறுமியை பெற்றோர் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் இந்த கொடூரத்தை செய்தது தெரியவந்துள்ளது.  மேலும் மாணவன் கடந்த பிப்ரவரி மாதத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் அதனை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தலைமறைவான மாணவனை தேடி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com