மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர்...மடக்கி பிடித்த போலீசார்...உத்தரவிட்ட நீதிமன்றம்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர்...மடக்கி பிடித்த போலீசார்...உத்தரவிட்ட நீதிமன்றம்!

திருநின்றவூரில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட தனியார் பள்ளியின்  தாளாளரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளிருப்பு போராட்டம்:

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2  படிக்கும் மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் வினோத் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகக் கூறி  கடந்த 23ஆம் தேதி  பள்ளியில் மாணவிகளின்  பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தையடுத்து பள்ளியின் தாளாளர் வினோத் தலைமறைவானார்.

இதையும் படிக்க: ஆளுநருடனான இபிஎஸ் சந்திப்பின் உண்மையான பின்னணி என்ன?!

15 நாள் காவலில் வைக்க உத்தரவு:

இதனையடுத்து தாளாளர் வினோத் மீது திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு  பதிவு செய்து வினோத்தை போலீசார் தேடி வந்தார்கள். அப்போது, வினோத் கோவாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த  தனிப்படை போலீசார், அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தேவி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, தாளாளரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதன் பெயரில் புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.