"மதக்கலவரத்தை தூண்டும் சீமான்" காங்கிரஸ் புகார்! 

"மதக்கலவரத்தை தூண்டும் சீமான்" காங்கிரஸ் புகார்! 
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் மத கலவரத்தையும், இனக் கலவரத்தையும் தூண்டும் வகையில் பேசி வரும் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதக் கலவரம் மற்றும் இனக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.  இது தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கமிட்டியின் ஈரோடு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் சிறுபான்மை பிரிவு  மாநில ஒருங்கிணைப்பாளர் ஜுபைர் அகமது, மாநிலத் துணைத் தலைவர் ஜவஹர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று நேரில் புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் "கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை சாத்தானின் பிள்ளைகள்" என்று வர்ணித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் மதக் கலவரத்தையும், இனக் கலவரத்தையும் தூண்டி வரும் வகையில் பேசி வரும் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாட்ஷா மற்றும் நிர்வாகிகளான திருச்செல்வம் ராஜேஷ் ராஜபா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com