உள்ளாட்சி தேர்தல் எதிரொலி.... காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 600 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உள்ளாட்சி தேர்தல் எதிரொலி.... காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்...
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஆசனூர் - எலவனாசூர்கோட்டை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் வந்த 4 பேரை கைது செய்த போலீசார், 600 மதுபாட்டில்கள் மற்றும் 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மதுபாட்டில்களை கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com