செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.  நேற்று முதல் நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞர் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் பிணை வழங்குவதற்கு  தமக்கு அதிகார வரம்பு இல்லை என தெரிவித்த சிறப்பு நீதிமன்றம் அமர்வு நீதிமன்றத்தல் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு வழகாட்டியது. 

இந்நிலையில், இன்று ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார். முறையீட்டை கேட்டுக்கொண்ட நீதிபதி அல்லி " LET ME SEE" என கூறினார்.

இவ்வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை முடித்து 120 பக்கத்திற்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்க தொடர்பான 3000 பக்க ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் படிக்க:  வழியில் பள்ளம்; பாதையை மாற்றிய சந்திரயான்-3 ரோவர்!