ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அட்டகாசம்...  மசாஜ் சென்டர் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை மாவட்டத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அட்டகாசம்...  மசாஜ் சென்டர் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு
கோவை ஜி.என்.மில்ஸ் ஆசிரியர் காலனி பகுதியில்  கேரலியம் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் மசாஜ் செண்டர் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கேரள ஆயுர்வேத சிகிச்சை என்ற போர்வையில், பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக துடியலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
 
இதன் அடிப்படையில் போலீசார், அந்த மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, போலிசாரை கண்டதும், அங்கிருந்த தப்பி ஓட முயன்ற புரோக்கர்கள் பிரவீன்குமார், செல்வின், மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அங்கு பூட்டப்பட்டிருந்த அறை ஒன்றில் அரை குறை ஆடைகளுடன் இருந்த ஆந்திரா, சென்னை, கோவையைச் சேர்ந்த 4 பெண்களை  போலீசார் கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட 7 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாகியுள்ள மசாஜ் சென்டரின் உரிமையாளரான தீபுமேத்யூவை தீவிரமாக தேடி வருகின்றனர்.  கேரளாவை சேர்ந்த தீபுமேத்யூ  ஆந்திரா கேரளா மற்றும் சென்னையை சேர்ந்த இளம் பெண்களை மூலை சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.