தேவாலய பாதிரியார் மீது பாலியல் புகார்!!

திருவள்ளூரில் பாதிரியார் ஒருவர் இளம் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே புதுப்பட்டு பகுதியில் கிறிஸ்தவ பெந்தகோஸ்தே என்ற சபை செயல்பட்டு வருகிறது. இதில் டேனியல் என்கிற ஞானசேகர் அங்கு பாதிரியாராக கடந்த 2 ஆண்டுகளாக ஊழியம் செய்து வருகிறார்.  அதோடு மட்டுமல்லாமல், அப்பகுதியில் வசிக்கும் சிறுவர் மற்றும் சிறுமிகளை வரவழைத்து ட்யூஷனும் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் மப்பேடு பகுதிகளில் வசித்து வந்தவர்களில் குறிப்பாக சிறுமிகளிடம் மட்டும் ஆபாசமாக நடந்துள்ளார் பாஸ்டர் டேனியல். மாலை நேரத்தில் வரும் சிறுமிகளை இரவில் அங்கேயே தங்க வைப்பதும், அதில் ஒரு சிலரை தனியே அழைத்து அந்தரங்க இடங்களில் கை வைத்து பழகுவதும் என இப்படியான தரங்கெட்ட செயல்களை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுற்றுலா செல்வதாக சிறுமிகளை வெளியே அழைத்துச் செல்லும் டேனியல், நீர்நிலை பகுதிகளில் குளிக்க வைத்து அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து இப்படியாக ஐஸ் வைத்துள்ளார். 

இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் பாஸ்டர் டேனியல் தனிமையில் அழைத்துச் சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை, 15 வயது சிறுவனான ஜெயபால் என்பவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனை கவனித்த டேனியல் நடந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக பதற்றத்தோடு தனது தாயிடம் கூறியுள்ளான் சிறுவன் ஜெயபால்.  

இதையடுத்து ஜெயபால், அவனது தாயார் பூங்கொடியுடன் சேர்ந்து ஊர் தலைவரை அணுகி, பாஸ்டர் டேனியலின் தரங்கெட்ட செயல்களை எடுத்துரைத்தார். இதையடுத்து அந்த பகுதி மக்கள் டேனியலின் முந்தைய காலத்தை அறிந்து கொள்ளும் போது அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளது.

ஏற்கெனவே கன்னியாஸ்திரி, மற்றும் பல பெண்களிடம் அத்துமீறியது குறித்து செவ்வாப்பேட்டை, சுங்குவார்சத்திரம் போன்ற காவல்நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதே நேரம் திருச்சபையில் ஏ.ஆர்.ஆர்.குரூப் என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததும் தெரியவந்துள்ளது. 

இறுதியாக 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஸ்டர் டேனியல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளனர்.