கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார்... விசாரணைக்கு உத்தரவு!!!

கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார்... விசாரணைக்கு உத்தரவு!!!

கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர் மீது ஏராளமான மாணவிகளுக்கு அந்த ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக பரப்பப்பட்டது.

இது தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்ற தேசிய மகளிர் ஆணையம் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டது.  இதனைத் தொடர்ந்து புகார் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு டிஜிபி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதே நேரத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவரின் பெயரில் சமூக வலைதளத்தில் தகவல் பகிரப்பட்டதால் சம்பந்தப்பட்ட மாணவி அதுபோல எந்த விதமான பாலியல் தொந்தரவும் கொடுக்கப்படவில்லை ஆசிரியர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  மாணவியின் புகாரை பெற்று அது குறித்தும் சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:  தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க  வேண்டும்...!!