கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த நபர்!    

முதல் கணவர் இறந்த நிலையில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த நிலையில் 6 மாதங்ககுக்கு முன் மனோஜ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக மனோஜ் கூற இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் மனோஜ்-ன் நடவடிக்கை பிடிக்காமல் அப்பெண் மனோஜை பிரிந்து பெற்றோர் அறிவுரைப்படி வேறொருவரை திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பெண் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அவர் வீட்டிற்குச் சென்ற மனோஜ் பெண்ணிடம் தன்னுடன் உல்லாசமாக இருக்கும்படி கூறியுள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, கோவமடைந்த மனோஜ் கொச்சை வார்த்தைகளால் அப்பெண்ணை ஆபாசமாகப் பேசி இன்னும் ஒரு நாளைக்குள் தனது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் தனது ஆபாசப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அப்பெண் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் பேரில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனோஜ் என்பவன் மீது கொருக்குப்பேட்டை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.