ஓடும் பஸ்ஸில் மாணவிக்கு பாலியல் தொல்லை... பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய நபர்...

ஓடும் பஸ்ஸில் மாணவிக்கு பாலியல் தொல்லை... பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய நபர்...

பல்லடம் அருகே ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை தர்ம அடிக் கொடுத்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 
Published on

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் சாலை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி நேரம் முடிந்த பின்பு அரசு பேருந்து ஒன்றில் ஏறி வீடு நோக்கி பயணம் செய்துள்ளார்.

அந்த அரசு பேருந்து பல்லடம் திருப்பூர் சாலை கரையான் புதூர் கடந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகானந்தம் 24 என்ற வாலிபர் ஒருவர் மாணவியின் இடுப்பை பிடித்து கிள்ளி சில்மிஷத்தில் கூறப்படுகிறது.

இதனால் மாணவியின் அலறல் சத்தம் கேட்ட சகபயணிகள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து பேருந்தில் இருந்து இறங்கி தர்மஅடி கொடுத்து பின்னர் பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com