16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... தட்டிக்கேட்ட பெற்றோருக்கு கொலை மிரட்டல்...

16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவர் கைது செய்து சிறையில் அடைப்பு.    தட்டிக்கேட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து  தேடிவருகின்றனர்.

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... தட்டிக்கேட்ட பெற்றோருக்கு கொலை மிரட்டல்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்  11 ம் வகுப்பு படித்து வரும் செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த  16 வயது சிறுமியை அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரேம்குமார் வயது 26 என்பவர் சிறுமியை காதலிப்பதாகவும், அதற்கு மறுத்து வந்த நிலையில் சிறுமிக்கு பிறந்தநாள் வந்ததாகவும், அதற்கு கேக் வெட்டி கொண்டாடி நீ என்னை காதலிக்கவில்லை என்றால் தலை மற்றும் உடலில் குத்திக் கொள்வேன் என்று  சிறுமியை மிரட்டி  கட்டாயபடுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.  
 
உடனே பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் சென்று தட்டிக்கேட்டதற்கு பாலியல் தொந்தரவு செய்த பிரேம்குமார் மற்றும் அவரது உறவினர்கள் தகறாரில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த  பிரேம்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி  8 மாத பெண் குழந்தை குழந்தை உள்ளது.  
 
உடனே பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் கோஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  மகளிர் போலீசார் பிரேம்குமாரை சிறையில் அடைத்தனர்.  இதில்  இருதரப்பினருக்கும் சண்டையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.