குடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு... சிறைக் காவலர் உட்பட 4 பேர் கைது...
கள்ளிக்குடி அருகே குடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு, சிறைக் காவலர் உட்பட 4 பேர் கைது.

புதுச்சேரியில் வீட்டில் சண்டை போட்டுவிட்டு கோபித்துக் கொண்டு வெளியே சென்ற இளம்பெண்ணை தங்க இடம் கொடுப்பதாக கூறி இரண்டு நாட்கள் தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்று வாலிபர்களை அதிரடியாக கைது செய்த போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர்.
கன்னியாக்குமாரியை சேர்ந்த 22 வயதுடைய பெண் புதுச்சேரி திப்புராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் தனது சகோதரியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே புறப்பட்ட அவர் தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக அவர் ஆட்டோ ஒன்றில் ஏறி புதிய பேருந்து நிலையம் சென்றுள்ளார்.
ஆனால் ஊருக்கு செல்ல கையில் பணம் இல்லாததால் எங்கு செல்வது என தெரியாமல் அந்த பெண் குழம்பியுள்ளார். அந்த பெண்ணின் மனநிலையை அறிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுனர் அவரை அங்கிருந்து முதலியார்பேட்டை அனிதாநகர் பெட்ரோல் நிலையம் அருகே அழைத்து வந்து, அந்த இடத்தில் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் சத்தம் போடவே, பயந்து போன ஆட்டோ ஓட்டுனர் அந்த பெண்ணை அங்கேயே இறக்கி விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.
தனியாக நின்றிருந்த அந்த பெண்ணை அங்கிருந்த 3 பேர் நைசாக பேச்சு கொடுத்துள்ளனர். அந்த பெண்ணுக்கு தங்க இடம் கொடுப்பதாக கூறி, அனிதா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணுக்கு 3 பேரும் பாலியல் தொல்லைகொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் 2 நாட்கள் அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர்.
மூன்று பேரும் வெளியே சென்றபோது அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள கடைக்கு வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு தொடர்ந்து நடத்திய விசாரணையில் இளம் பெண்ணை கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சாதிக்பாட்ஷா, தினேஷ், அரவிந்தன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இளம்பெண்ணை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரை முதலியார் பேட்டை போலீசார் தேடி வருகின்றனர். அதிக குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இளம்பெண்ணை இரண்டு நாட்கள் தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க :சந்திரயான் மினியேச்சர் மாதிரியை மாணவர்களுக்கு விளக்கினார் நிர்மலா சீதாராமன்!
சென்னையில் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாயை மர்ம நபர் ஒருவர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அடையாறு, சர்தார் பட்டேல் சாலையில் ஹவுஸ் ஆப் பிரேயர் என்கிற தேவாலயம் உள்ளது. அந்த ஆலயத்தில் தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய நபர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி ஆலய நிர்வாகத்தினர் ஆராதனை முடிந்த பிறகு காணிக்கை பணம் மொத்தம் ஒன்பது லட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எண்ணி அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைத்துள்ளனர். மறு நாள் நிர்வாகத்தினர் பிரோவில் உள்ள பணத்தை எடுக்க வந்த போது பணம் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடந்தனர்.
இது தொடர்பாக ஆலய பொருளாளர் பென்சன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆலயத்தில் உள்ள சி.சி.டி. வி காட்சியை ஆய்வு செய்த போது முகம் மற்றும் கைகளில் பாலிதின் கவர்களை கட்டி கொண்டு வந்த மர்ம நபர் பிரோவில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
அந்த மர்மநபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து தேடி வருகின்றனர். பிரோவில் பணம் இருப்பது தெரிந்த நபரே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடதேதி வருகின்றனர். அதன் அடிப்படையில் ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: சத்தீஸ்கா், தெலங்கானா செல்லும் பிரதமா்...ரூ.23 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட ஆலை அா்ப்பணிப்பு!
விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கம் ரயிலடி வாயிலில் உறங்கி கொண்டிருந்தவர் மீது வெடி குண்டு வீசிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் கண்டம்பாக்கத்தை சேர்ந்த நாராயணசாமி என்ற ரவுடி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் சண்டையிடுவது கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இதையும் படிக்க : இன்று முதலமைச்சர் தலைமையில் ஆட்சியர், காவல்துறையினர் மாநாடு...!
இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த நாரயணசாமி கண்டம்பாக்கம் ரயிலடி வாயிலில் உறங்கி கொண்டிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தது மட்டும் அல்லாமம், அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய அதே கிராமத்தை சேர்ந்த மாதேஷ் முருகையன், புதுவை மாநிலத்தைச் சேர்ந்த தமிழரசன் கார்த்தி வசந்தகுமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள நாரயணசாமியை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், திருமுட்டம் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்ற ஜீவா என்ற மாணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தில் நடந்த வாக்கு வாதத்தின் போது புளியங்குடியை சேர்ந்த நபர் மாணவன் ஜீவாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த திருமுட்டம போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவனின் உடலை கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ஜீவாவின் உடல் விருதாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புளியங்குடியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவருக்கும் 12 ஆம் வகுப்பு படித்துவரும் ஜீவாவிற்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும் இதனால் இந்த படுகொலை நிகழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானது...!
சென்னை புழல் மத்திய தண்டனை சிறை கைதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரின் மகன் கஜா ( எ) கஜா கஜேந்திரன் ( வயது 63 ) இவர் கடந்த 2007 ம் ஆண்டு மறைமலை நகரில் நடந்த கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை முடிந்து கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி முதல் புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வந்தார். இந்நிலையில் மன உளைச்சல் காரணமாக இன்று அதிகாலை கழிவறையில் உள்ள ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த புழல் சிறை காவலர்கள் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பற்றி புழல் காவல் நிலைய ஆய்வாளர் மல்லிகா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானது...!